தமிழகத்தில் 2 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

2 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தற்போது கோடை காலம் என்பதால் பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக பகல் நேரம் வெளியில் வாகனத்தில், கட்டுமான பணிகளில் வேலை செய்வோர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வானிலை ஆய்வு மையமானது இன்றும் நாளையும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என கூறியுள்ளது.

இன்று நாளை என ஓரிரு நாட்கள், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனவும், வெயிலின் அளவு 2 முதல் 3 டிகிரி வரையில் தமிழகத்தில் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த வெயிலின் தாக்கத்தை தவிர்க்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். நீண்ட தூரம் பயணம் செய்வோர், வெயிலில் வேலை செய்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும், கர்ப்பிணிகள், வயதானோர், குழந்தைகள் பகல் 12 மணி முதல் 3 மணிவரையில் வெளியில் செல்ல வேண்டாம் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.