ஆண்களின் அன்பில் மென்மை இல்லாவிட்டாலும் உண்மை இருக்கும் – சர்வதேச ஆண்கள் தினம்

வருடம் தோறும் நவம்பர் 19ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. ஆண்கள் என்றால் சாதாரணமாக ஒரு பாலினம் என குறிப்பிட்டு விட முடியாது. அப்பா, கணவன், தாத்தா, மகன், மருமகன் தம்பி, அண்ணன், மச்சான் என பல்வேறு உணர்வுபூர்வமான உறவுகளை கொண்ட இந்த ஆண்கள் அவர்களது வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளும் ஏராளம். குடும்பத்திற்காக பலர் தியாகிகளாக கூட மாறுகின்றனர். நாட்டுக்காக தியாகம் செய்பவர்கள் வெளியில் மக்களால் போற்றப்படுகின்றனர், ஆனால் குடும்பத்தில் தியாகம் செய்யக்கூடிய இந்த ஆண்கள் குடும்பத்தினரால் தான் போற்றப்பட வேண்டும்.

ஆனால் பல குடும்பங்களில் அவர்களின் தியாகம் புரியாமலேயே போய்விடுகிறது. சாதாரணமாக ஒரு பெண் குழந்தை பிறக்கும் பொழுது மகிழ்ச்சி அடையக் கூடிய குடும்பம், ஆண் குழந்தை பிறந்தால் மிகவும் மகிழ்ச்சி அடையும். காரணம் என்னவென்றால் எனது மகன் வளர்ந்து என்னை நிச்சயம் நல்ல முறையில் வைத்திருப்பான், எனக்கு உழைத்து தருவான், எனக்கு கடைசியில் கொள்ளி வைப்பான் என ஆண்களுக்கு என்று ஒவ்வொரு பொறுப்புகளை பிறக்கும் பொழுதே கொடுத்து விடுகின்றனர். சிலர் அந்தப் பொறுப்புகளை முடிப்பதற்குள்ளாகவே தங்களது வாழ்க்கையை வாழ மறந்துவிடுகின்றனர். பலர் இந்த பொறுப்புகளிலிருந்து தவறுவதால் ஆண் என்ற அங்கீகாரத்தை இழந்துவிடுகின்றனர். ஆனால் பல ஆண்கள் தங்கள் குடும்பத்திற்காக தற்பொழுதும் தியாகிகளாக தான் இருக்கின்றனர்.

பெண்களின் வாழ்க்கை தற்பொழுது முன்னேறியிருக்கிறது என்றால் அதற்க்கு  தான், பெண்களை இச்சை பொருள்களாக ஆண்கள் பார்க்கிறார்கள் என ஒட்டுமொத்தமாக குறை கூறிவிட முடியாது. அடுப்பங்கரையிலிருந்து பெண்கள் வெளியேற உதவியது அதே ஆண்கள் தான். எனவே, தாய்க்கு நல்ல மகனாகவும், மனைவியை கைவிடாத துணைவனாகவும், தன குழந்தைகளுக்கு சிறந்த அப்பாவாகவும், பேரனுக்கு தாத்தாவாகவும், தன்னை நம்பியுள்ள சமூகத்தில் நல்ல குடிமகனாகவும் மாற உழைக்கும் ஒவ்வொரு ஆண்களின் தியாகத்தையும் நாம் போற்றியாக வேண்டும். நமது வீட்டிலிருக்கும் உறவுகளை நாம் மதிப்போம், நமக்காய் உழைக்கும் கரங்களை தங்குவோம். “அனைவருக்கும் சர்வதேச ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்”.

author avatar
Rebekal

Leave a Comment