மருத்துவ கழிவுகள்! கடும் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை ஆணை.!

பிற மாநில மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

தமிழகத்தில் பிற மாநிலங்களில் இருந்து மருத்து கழிவுகளை கொட்டுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் மருத்துவக்கழிவுகள் கொட்டுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

medicalweste

மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமரா கொண்டு கண்காணிக்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மருத்துவக்கழிவுகள் கொட்டுவதை தடுக்காத நெல்லை ஆட்சியர் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வந்து மருத்துவ கழிவுகளை கொட்டியது தொடர்பாக தென்காசியில் அதிக வழக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் மருத்துவ கழிவுகளைய் கொட்டியது தொடர்பாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

tngovt,sc

கோவை மாவட்டத்தில் 2018 முதல் 2022 வரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் பிற மாநில மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க தவறியதாக தென்காசி ஆட்சியர் மீது சிதம்பரம் என்பவர் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment