38 C
Chennai
Sunday, June 4, 2023

சொன்னதை செய்து காட்டிய ஹிப்ஹாப் ஆதி…கண்கலங்கிய சூப்பர் சிங்கர் பிரபலம்…நெகிழ்ச்சி வீடியோ இதோ.!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி...

பயணிகள் பாதுகாப்பில் அரசு அலட்சியம்… சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு.!

ஒடிசா பாலசோர் ரயில் விபத்தில் ஒன்றிய அரசு பயணிகளின்...

மயங்க், விவ்ரண்ட் அதிரடி பேட்டிங்… மும்பை வெற்றி பெற 201 ரன்கள் இலக்கு.!

ஐபிஎல் தொடரின் இன்றைய MI vs SRH போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 200/5 ரன்கள் குவிப்பு.

ஐபிஎல் 2023 தொடரின் பரபரப்பான இறுதிக்கட்டத்தில் இன்றுடன் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைகின்றன. நான்காவது அணியாக பிளேஆப்-க்கு செல்ல மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய 3 அணிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற மும்பை அணி ஹைதராபாத்தை முதலில் பேட் செய்ய அழைத்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்கள் விவ்ரண்ட் சர்மா(69 ரன்கள்) மற்றும் மயங்க் அகர்வால்(83 ரன்கள்) நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தனர்.

இதையடுத்து எந்த வீரரும் பெரிதாக ரன்கள் ஏதும் குவிக்கவில்லை, வந்த வேகத்தில் ஆட்டமிழந்தனர். முடிவில் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்துள்ளது. மும்பை அணி சார்பில் ஆகாஷ் மத்வால் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.