செல்போன் குறைத்து., வாழ்வை வாழுங்கள்.. செல்போனை கண்டுபிடித்தவரின் சூப்பர் அட்வைஸ்..!

செல்போனை கண்டுபிடித்த மார்ட்டின் கூப்பர் அவர்களே ஒருநாளைக்கு வெறும் சில நிமிடங்கள் தான் செல்போன் உபயோகித்து வருகிறாராம்.

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் டெலிபோனை கண்டுபிடித்தார். 1973ஆம் ஆண்டு மார்ட்டின் கூப்பர் எனும் விஞ்ஞானி டெலிபோனை சுருக்கி, செல்போனாக மாற்றி பெரும்பாலானோர் கையில் விலங்கு மாட்டிவிட்டது போல ஆக்கிவிட்டார் மார்ட்டின் கூப்பர்.

அனைவரது தொலைத்தொடர்பு வேலைகளை சுலபமாக்கி, மற்ற வேலைகளில் கவனம் செலுத்த இதனை கண்டுபிடித்தால், பெரும்பாலானோர் செல்போன் உபயோகிப்பதையே ஒரு வேலையாக மாற்றிவிட்டனர்.  இப்படி இருக்கும் சூழலில், செல்போனை கண்டுபிடித்த மார்ட்டின் கூப்பர் அண்மையில் கொடுத்த நேர்காணல் தான் பலருக்கும் ஷாக்கிங்காக இருந்தது.

அதாவது, அவர் ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் மட்டுமே செல்போன் உபயோகிப்பாராம். அதிலும் குறிப்பிட்டு சொன்னால் ஒரு நாளைக்கு 5 சதவீதத்திற்கும் குறைவாக தான் செல்போன் உபயோகிப்பாராம். மேலும், மற்றவர்களுக்கு இவர் கூறும் அறிவுரை என்னவென்றால், செல்போன் உபயோகிப்பதை குறைத்து, மக்களிடம் நேரடியாக பழகும் நிஜவாழ்வை வாழுங்கள் என கூறியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment