பப்ஜி விளையாட்டு உருவாக்கிய காதல் ஜோடிகளுக்கு திருமணம்!

ஊர் விட்டு ஊர் கடந்து பப்ஜி விளையாட்டு உருவாக்கிய காதல் ஜோடிகள் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

பப்ஜி விளையாட்டின் மூலம் பலர் உயிர் இழப்பது போல, பலர் காதல் வலையில் மாட்டிக் கொள்கின்றனர். பேச்சுவார்தையுடன் கூடிய இந்த விளையாட்டால் தற்போது திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டார் அருகே சிறுகோல் ஆசாரி பெற்ற பிள்ளை எனும் பகுதியை சேர்ந்த மரவியாபாரி சசிக்குமார் என்பவர் மகள் பபிஷா என்பவருக்கு 20 வயது ஆகிறது. கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பை நிறுத்திவிட்டு தற்போது மொபைல் போன் மூலம் பப்ஜி விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் திருவாரூரை சேர்ந்த அஜின் பிரின்ஸ் என்பவருடன் சேர்ந்து விளையாடும் போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. கடந்த 19ஆம் தேதி பாபிஷா வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். இது குறித்து போலீசில் பாபிஷாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதனை அடுத்து கடந்த 22ஆம் தேதி அஜின் மற்றும் பபிஷா திருவட்டார் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அவர்கள் இருவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதலர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதில் உறுதியாக உள்ளனர். எனவே போலீசார் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். மேலும் காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

author avatar
Rebekal