அசுர ஓட்டம்! 100 கோடியை நெருங்கிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’!

Manjummel Boys பொதுவாகவே ஒரு நல்ல திரைப்படங்கள் வெளியானால் அந்த படங்களை கொண்டாட மக்கள் தவறியதே இல்லை. அப்படி தான்  இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை மக்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள். கடந்த 22-ஆம் தேதி வெளியான இந்த படம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

read more- நான் ‘அம்மாவாக ஆசை படுகிறேன்’! பொன்னியின் செல்வன் நடிகை ஓபன் டாக்!

காலித் ரஹ்மான், காலித் ரஹ்மான், கணபதி எஸ் பொதுவால், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தில் இடம்பெற்ற காட்சிகள் எல்லாம் படம் பார்த்தவர்களுக்கு இன்னுமே நினைவில் இருக்கிறது என்று கூட சொல்லலாம். 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூலை குவித்து வருகிறது.

READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்!

இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு கேரளாவையும் தாண்டி தமிழகத்திலும் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. இதுவரை இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 80 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

READ MORE – கமல் தவறவிட்ட வெற்றி… அதே இடத்தில் தட்டிய தூக்கிய மல்லு சேட்டன்ஸ்.!

படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக இன்று அல்லது நாளை உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திலும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 15 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment