கேகே உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை… மம்தா பானர்ஜி அறிவிப்பு.!

தமிழில் உயிரின் உயிரே, அப்படி போடு, அண்டங்காக்கா கொண்டக்காரி,நினைத்து நினைத்து உட்பட பல ஹிட் பாடல்களை பாடிய பிரபல பாலிவுட் பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் நேற்று காலமானார்.

அதாவது, 53 வயதான பிரபல பாடகர், தெற்கு கொல்கத்தாவில் உள்ள நெரிசலான நஸ்ருல் மஞ்ச் ஆடிட்டோரியத்தில் ஒரு இசை நிகழ்ச்சியின் போது உடல்நிலை சரியில்லாமல் சிஎம்ஆர்ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் வரும்போதே இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மாரடைப்பால் உயிரிழந்த கேகே உடல் இன்று பிற்பகல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த பாடகர் கேகேவுக்கு மேற்கு வங்க முதல்வர் அவரை கவுரவிக்கும் வகையில் கொல்கத்தா விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு முழங்க மரியாதை வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் அறிவித்துள்ளார்.

அந்த வகையில், இவரது உயிரிழந்த செய்தி அறிந்து இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, கே.கே.யின் பாடல்கள் அனைத்து வயதினரையும் கவர்ந்த பலவிதமான உணர்வுகளை பிரதிபலிப்பதாக கூறினார். மேலும், பல உணர்வுகளுக்கு குரல் கொடுத்த பாடகருக்கு விடைபெற்றதையடுத்து உலகம் முழுவதிலுமிருந்து அவருக்கு இதய அஞ்சலிகள் குவிந்து வருகிறது .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment