மக்களின் கவனத்திற்கு இந்தந்த வங்கியில் நாளை முதல் முக்கிய மாற்றங்கள் .. முழு விவரம் இதோ ..!

நாளை முதல் பேங்க் ஆஃப் பரோடா , பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகிறது.

வங்கி, நிதி மற்றும் பிற துறைகள் தொடர்பான பல விதிகள்  நாளை (பிப்ரவரி 1) முதல் மாறுகின்றன. இந்த புதிய விதிகள் ஒரு சாமானியனின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்பதால் இந்த மாற்றங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வது அவசியம்.

பிப்ரவரி 1, 2022 முதல் உங்கள் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் முக்கிய மாற்றங்களை இங்கே பார்க்கலாம்.

SBI IMPS பரிவர்த்தனை கட்டணங்கள்:

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) உடனடி கட்டணச் சேவை (IMPS) மூலம் பணப் பரிவர்த்தனைக்கான வரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தியுள்ளது. இருப்பினும் வாடிக்கையாளர்களுக்கு வருத்தமான செய்தி என்னவென்றால், வங்கி உங்களிடம் கட்டணம் வசூலிக்கும்.

ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான ஐஎம்பிஎஸ் (IMPS)பரிவர்த்தனைகளுக்கு வங்கி உங்களிடம் ரூ.20 -க்கும் மேல் ஜிஎஸ்டி வசூலிக்கும் என்று எஸ்பிஐ கூறியுள்ளது. இந்தக் கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

பாங்க் ஆஃப் பரோடா  Positive Pay:

பேங்க் ஆஃப் பரோடா பிப்ரவரி 1, 2022 முதல் அதன் காசோலை செலுத்தும் விதிகளில் மாற்றங்களைச் செய்யவுள்ளது. BoB வாடிக்கையாளர்கள் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான காசோலைகள் மூலம் செலுத்தும் கட்டணங்களுக்கு Positive Pay உறுதிப்படுத்துவது கட்டாயமாகும்.

Positive Pay Positive Pay என்பது காசோலை மோசடியைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தானியங்கி (Automatic) பண மேலாண்மை சேவையாகும். ரூபாய் 50,000- க்கு மேல் மதிப்புள்ள காசோலையை வழங்கும் நபர்  தனது கணக்கு உள்ள வங்கியின் மொபைல் செயலியில் அல்லது இணையதளத்தில் தன்னால் வழங்கப்பட்ட காசோலை தொடர்பான அனைத்து தகவல்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

காசோலை பகிர்ந்த தகவல் தரவுகள் பொருத்தமாக இருந்தால் மட்டுமே காசோலைக்குப் பணம் வழக்கப்படும்.

பஞ்சாப் நேஷனல்:

பஞ்சாப் நேஷனல் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் EMI அல்லது பிற தவணை செலுத்தத் தவறினால் ரூ.250 அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன் ரூ.100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.