மகேஷ்பாபுவின் 25வது படம் பற்றிய சுவாரஸ்ய செய்தியை வெளியிட்ட இயக்குனர்!

  • மகேஷ் பாபு நடிப்பில் 25வது படமாக மஹர்ஷி திரைப்படம் உருவாகி வருகிறது.
  • தமிழில் ஸ்பைடர், பரத் எனும் நான் ஆகிய படங்கள் ரிலீஸாகி உள்ளன.
  • தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து நிற்பவர் நடிகர் மகேஷ் பாபு.இவர் தமிழும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் எனும் படத்தில் நடித்திருந்தார். இவர் படம் தமிழும் டப் செய்யப்பட்டு சமீபத்திய படங்கள் ரிலீசாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இவர் கடைசியாக நடித்த பரத் எனும் நான் திரைப்படம் தெலுங்கிலும், தமிழும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இவர் நடிப்பில் தற்போது 25வது படமாாக மஹர்ஷி படம் தயாராகி வருகிறது.

இந்த படத்தை வம்சி படைப்பாளி இயக்கி வருகிறார். இந்த படத்தில் அல்லரி நரேஷ், பூஜா ஹெக்டே ஆகியேர் உடன் நடித்து வருகின்றனர். இந்த படம் பற்றி தற்போது இயக்குனர் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் இப்படம் மகேஷ்பாபு, அல்லரி நரேஷ், பூஜா ஹெக்டே ஆகியோரின் ஃப்ரண்ட்ஷிப்பை மையமாக வைத்தது படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடலை நாளை காலை 9.09மணிக்கு படக்குழு வெளியிட உள்ளனர்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment