கரூரில் 4 பள்ளி மாணவிகள் உயிரிழந்த விவகாரம்.! சிபிசிஐடி கண்காணிப்பில் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கரூரில் 4 பள்ளி மாணவிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி டிஎஸ்பி கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவிகள், திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்றுணர். பின்னர் போட்டி முடிந்து, கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதிக்கு சுற்றி பார்க்க ஆசிரியர்கள் துணையுடன் வந்துள்ளனர். மாயனூரில் உள்ள காவிரி ஆற்றில் மாணவிகள் ஒன்றாக குளிக்க சென்றுள்ளனர்.

அந்த சமயம் ஆழம் தெரியாத பகுதிக்கு மாணவிகள் சென்ற காரணத்தால் நீரில் மூழ்கி 4 பள்ளி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவர்களின் சடலங்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மாயனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்றத்தில், புதுகோட்டை பிலிப்பட்டியை சேர்ந்தவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் மாணவிகள் உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை தாமதமாக நடைபெறுகிறது எனவே இதனை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வாதிடுகையில், மாணவிகள் உயிரிழப்பு சந்தேக மரணம் என்பதில் இருந்து ஆசிரியர்கள் அஜாக்கிரதையால் ஏற்பட்ட மரணம் என மாற்றி காவல்துறையினர் விசாரித்து வருவதாக குறிப்பிட்டனர். இதனை அடுத்து, புதுக்கோட்டை சிபிசிஐடி டிஎஸ்பி கண்காணிப்பில் மாயனூர் காவல்துறையினர் இந்த வலக்கை விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.