மதுரை மேம்பாலம் விபத்து – தனியார் நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம்!

மதுரையில் மேம்பாலம் இடிந்த விபத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் விதிப்பு.

மதுரை புதுநத்தம் சாலையில் 7.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் ரூ.545 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பாக கட்டுமான நிபுணர்கள் கொண்ட குழு விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் அடிப்படையில், ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேம்பாலம் இடிந்த விபத்தில் ஜேஎம்சி நிறுவனத்திற்கு ரூ.3 கோடியும், கட்டுமான ஆலோசனை நிறுவனத்திற்கு ரூ.40 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. 80% கட்டுமான பணி முடிந்த நிலையில், மேம்பாலம் அக்டோபரில் பயன்பாட்டுக்கு வரும் என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. விபத்து தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை துறையால் நியமிக்கப்பட்ட 6 கண்காணிப்பு பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்