தமிழக மாவட்ட நீதிமன்ற நீதிபதி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.! LAW முடித்திருந்தால் போதும்.!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கீழ் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளுக்கான காலி பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (01-ஜூலை-2023) முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஜூலை 31ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..

பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :

  • மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் – 50 காலிப்பணியிடங்கள்.

கல்வித்தகுதி :

  • அங்கீகரிக்கப்பட்ட சட்ட கல்லூரியில் குறிப்பிட்ட வருட இடைவெளிக்குள் சட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும்.
  • சட்டப்படிப்பு முடித்து தற்போது வரையில் வழக்கறிஞர் துறையில் பணியாற்றி இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :

  • ரூ.51,550/-  முதல் ரூ.63,070/- + மேற்படி செலவீனங்கள் அடங்கும்.

வயது வரம்பு : 

  • குறைந்தபட்சம் 35 வயது முதல் 60 வயது வரையில்.
  • பணிக்கேற்ப அதிகபட்ச வயது வரம்பு மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : 

  • ஆன்லைன் தேர்வு, நேர்முக தேர்வுகள் அடிப்படையில் தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பம் தொடங்கிய தேதி – 01 ஜூலை 2023.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 31 ஜூலை 2023.

விண்ணபக்கட்டணம் – ரூ.2000/- (SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை)

விண்ணப்பிக்கும் முறை : 

  • சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ தளமான www.mhc.tn.gov.inக்கு செல்ல வேண்டும்.
  • அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் நீதிபதிகள் பணிக்கு விண்ணப்பிக்க இருக்கும் லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதன் பிறகு ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு பின்னர் அப்ரன்டீஸ் பயிற்சிக்கு பணியமர்த்தப்படுவர்.
author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.