இறுதிப் போட்டியில் தோல்வி…என்னால் தூங்க முடியவில்லை…மோஹித் ஷர்மா வேதனை.!!

ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் தோல்வியடைந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னால் இன்னும் தூங்கமுடியவில்லை என குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி 

ஐபிஎல் 2023-யின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த் குஜராத் அணி 20 ஒவர்களில் 214 ரன்கள் குவித்தது.  பிறகு சென்னை அணி களமிறங்கியதும் மழைபெய்த காரணத்தால் டக்வர்த் லூயிஸ் விதிப்படி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ipl 2023 final
ipl 2023 final Image source file image

எனவே 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி  களமிறங்கியது. பரபரப்பாக போய்கொண்டிருந்த இந்த போட்டியின் கடைசி ஓவரை மோஹித் சர்மா தான் வீசினார். 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. பிறகு ரவீந்திர ஜடேஜா  ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்தார் இதன் மூலம் சென்னை அணி வெற்றிபெற்று 5-வது முறையாக கோப்பையை வென்றது.

தோல்வி குறித்து மோஹித் சர்மா வேதனை 

இந்த நிலையில் போட்டியில் தோல்வியடைந்து குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா ” ரவீந்திர ஜடேஜாவுக்கு நான் வீசிய பந்து தவறான பந்து. இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது சாதாரணமான ஒன்று இல்லை. நான் இன்னும் அதனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். என்னால் இன்னும்  தூங்க முடியவில்லை.

mohit sharma ipl
mohit sharma ipl Image source file image

கடைசி பந்தை நான் யார்க்கர்-ஆக வீச முயற்சித்தேன். துரதிர்ஷ்டவசமாக, அது நான்  திட்டமிட்டபடி நடக்கவில்லை. நான்  யார்க்கர் வீச முயற்சி செய்த அந்த பந்து ஃபுல் டாஸாக மாறியது அதனை ஜடேஜா  ஃபைன் லெக் மூலம் பவுண்டரி எல்லைக்கு அடித்து அணியை வெற்றிபெற செய்தார்” என கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.