நாடாளுமன்ற அத்துமீறல்.! இனி பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.. சபாநாயகர் அறிவிப்பு.! 

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தை தொடர்ந்து இனி பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 22வது ஆண்டு பாராளுமன்ற தாக்குதல் நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இன்றைய தினம் நாடளுமன்றத்தில் பார்வையாளர்களாக அரங்கில் அமர்ந்து இருந்த 2 இளைஞர்கள் திடீரெனபாதுகாப்பு வளையத்தை மீறி  மக்களவையில் இறங்கினார்.

பெரும் பதற்றம்.! நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த நபர்கள்.. பாதுகாப்பு அத்துமீறல்.?

மேலும் அவர்கள், மஞ்சள் நிற வண்ணப்புகை வரும் சிறிய வகை  பட்டாசு வெடிபொருளையும் உள்ளே பரவ செய்தனர். இதனால் மக்களவையில் பெரும் பதற்றம் உண்டானது. அதே நேரத்தில் வெளியிலும் இருவர் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

மக்களவையில் நுழைந்த இருவரையும் பாதுகாவலர்கள் கைது செய்தனர். அதே போல வெளியில் ஒரு பெண், ஒரு இளைஞர் என இருவர் கைது செய்யப்பட்டனர். நாடளுமன்றத்தில் மக்களவைக்குள் நுழைந்த இருவரும் மகாராஷ்டிராவை சேர்ந்த சாகர் சர்மா, டி மனோரஞ்சன் என்பவர்களும் நீலம் எனும் ஹரியானவை சேர்ந்த ஒரு பெண்ணும், மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு இளைஞனும் கைது செய்யப்பட்டனர்.

இந்த பாதுகாப்பு மீறலுக்கு பிறகு பாராளுமன்றத்தில் பார்வையாளர்களுக்கான அனுமதி வழங்குவதற்கு சபாநாயகர் மக்களவை ஓம் பிர்லா தடை விதித்துள்ளார்.  மக்களவையில் பாதுகாப்பு மீறல் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஓம்பிர்லா தெரிவித்தார். இந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் மக்களவை துவங்கியது.

நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே கைது செய்யப்பட்ட ஹரியானவை சேர்ந்த நீலம் எனும் இளம்பெண் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசு எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. அதனை நிறுத்த வேண்டும்.  காவல்துறை எங்கள் மீது தடியடி நடத்துவதை நிறுத்த வேண்டும்.  நாங்கள் எந்த அமைப்பையும் சார்ந்தவர்கள் அல்ல.  இங்கு சிறு வியாபாரிகள் , தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனை எதிர்த்து நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். எங்கள் குரலை யாரும் கேட்பதில்லை அதனால் தான் இவ்வாறு செய்தோம் என்று கூறியபடி சென்றார். அவரை பெண் காவலர் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.