உள்ளாட்சித் தேர்தல் : பதிவான வாக்குகள் எவ்வளவு ?

  • ஊரக உள்ளாட்சிகளுக்கு முதற்க்கட்ட தேர்தல் நடைபெற்றது.
  • ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 76.19 % வாக்குகள் பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் நேற்று  27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.இந்நிலையில்  முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 76.19 % வாக்குகள் பதிவாகி உள்ளது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.