கொரோனாவுக்கு சேவை செய்யும் மதுபான கடைகள்- இயக்குநர் வெங்கட் பிரபு.!

வீடியோக்களை பார்த்தால் அனைத்து மதுக் கடைகளும் இன்று முதல் கொரோனாவுக்கு சேவை செய்ய தொடங்கி விட்டது என்று நினைக்கிறேன் என்று இயக்குநர் வெங்கட் பிரபு கூறுயுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் சமூக இடைவெளியை பின்பற்றி சில அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் டாஸ்மாக் கடைகளையும் திறக்கப்படுமோ என்ற அச்சம் பலரிடமும் இருந்து வந்தது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் நேற்றைய தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பயமின்றி சமூக விலகலை கடைப்பிடிக்காமல் மது வாங்க வரிசையில் நின்று முண்டியடித்தனர் . இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக எல்லைகளில் உள்ள மக்களில் சிலர்  அண்டை மாநிலங்களில் சென்று கூட்ட கூட்டமாக  மதுபாட்டில்கள் வாங்கியதால் சமூக விலகல் காற்றில் பறந்தது. இதனால் தற்போது தமிழக அரசு சில நிபந்தனைகளுடன் கூடிய மே 7முதல் டாஸ்மாக் கடைகளை தமிழகத்தில் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த உத்தரவை பலர் கண்டித்தும், பலர் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர். 

இது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில், வீடியோக்களை பார்த்தால் அனைத்து மதுக் கடைகளும் இன்று முதல் கொரோனாவுக்கு சேவை செய்ய தொடங்கி விட்டது என்று நினைக்கிறேன். எனக்கு நன்றாக தெரியும், லோட்டா மக்கள் என்னிடம் ஸ்டாக் உள்ளதாக தான் கூறுவார்கள், ஆனால் ஏழை மக்கள் என்ன செய்வார்கள் என்று ப்ளா ப்ளா ப்ளா என்று தான் கூறுவார்கள் என்று  பதிவிட்டுள்ளார். மேலும் இதனிடையே எனக்கும் ஸ்டாக் தீர்ந்து பல நாளாச்சு, ஆனால் பாதுகாப்பு முக்கியம் என்று பதிவு செய்துள்ளார். இந்த வேடிக்கையான டுவீட்டுக்கு பலர் தங்களது லைக்குகளை குவித்து வருகின்றனர்.