31-ம் தேதி சட்டப் பேரவை கூட்டம்.. ராஜஸ்தான் முதல்வர் நம்பிக்கை.!

ராஜஸ்தானில் தற்போது அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் முயன்று வந்த நிலையில், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா சட்டப் பேரவையைக் கூட்ட மறுத்து வந்தநிலையில், இரண்டு நாள்கள் முன் 3 நிபந்தனைகளுடன் சட்டப்பேரவையை கூட்டத் தயார் என ஆளுநர் அறிவித்தார்.

இதையடுத்து, முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் அவரது இல்லத்தில் அவசர அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சிங், ஆளுநருடன் எந்த மோதல் போக்கையும் ராஜஸ்தான் அரசு விரும்பவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் மறுக்கக்கூடாது என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

இதனால், அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆளுநர் மரியாதை கொடுப்பார் என்று நம்புகிறோம். எங்கள் கோரிக்கைபடி வரும் 31-ம் தேதி சட்டப்பேரவை ஆளுநர் கூட்டுவார் என முதல்வர் நம்புகிறார் என கூறினார்.

 

author avatar
murugan