29 C
Chennai
Wednesday, June 7, 2023

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு.!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை...

பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 62,900 புள்ளிகளாக வர்த்தகம்..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 161.69 புள்ளிகள் சரிந்து 62,900...

அரசு நிலங்களின் குத்தகை விவரம்..! இணையத்தில் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அரசு நிலங்களின் குத்தகை விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

மதுரையில் தனியார் ஹோட்டல் நிறுவனம் ஒன்று குத்தகைக்கு எடுத்த அரசு நிலத்தின் குத்தகை காலம் முடிந்தும் 15 ஆண்டுகள் வாடகை செலுத்தாமல் அனுமதியின்றி ஹோட்டல் நடத்திய விவாகரத்தில், வாடகையை மறு ஆய்வு செய்து ரூ.36.58 கோடி செலுத்த வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஹோட்டல் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

தற்பொழுது இந்த வழக்கில் ஹோட்டல் நிறுவனம் வைத்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்ததோடு, தமிழகத்தில் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மறு ஆய்வு செய்த குத்தகை விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.