புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி, நொடியில் தப்பித்த சிறுத்தை…வைரலாகும் வீடியோ..!

கழுதை புலி வருவதை கவனித்த சிறுத்தை, விரைவில் செயல்பட்டு, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு நொடியில், கழுதை புலிக்கு மேல் குதித்து ஒரு மரத்தில் ஏறி உயிர்பிழைத்தது.
அந்த விடியோவை இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்த், அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், “சில நேரங்களில் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான இடைவெளி ஒரு தாவல். வயதுவந்த சிறுத்தைகளை அவ்வப்போது அபாயகரமான தாக்குதல்களால் தாக்கும் ஒரே விலங்குகள் சிங்கம் மற்றும் கழுத்தை புலி மட்டுமே ஆகும். இது காயம் அல்லது ஒரு ஹைனாவுடன் சண்டையிடும் அபாயத்தைத் தவிர்க்கிறது.” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.