தலைவி படத்தை பார்த்து வியந்த தலைவர் ரஜினிகாந்த்.!

தலைவி திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தலைவி. இந்த திரைப்படத்தில் ஜெயலலிதா சினிமா வாழ்க்கையிலிருந்து எவ்வாறு அரசியலில் நுழைந்தார் அரசியலில் எவ்வாறு சவால்களை எதிர்கொண்டு 1991-ல் முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றது வரையில் இரண்டு அரைமணிநேர சினிமா ஓட்டத்திற்கு  ஏற்றவகையில் காட்சி படுத்தப்பட்டுள்ளது.

 இந்த திரைப்படத்தை தெய்வ திருமகள், தலைவா, ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமான ஏ எல் விஜய் இயக்கியுள்ளார். இந்த படத்தில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமியும், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் நடித்துள்ளார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி வேடத்தில் நாசரும், ஆர்.எம் வீரப்பனாக சமுத்திரக்கனியும், எம்.ஆர் ராதாவாக ராதா ரவியும் நடித்துள்ளனர். படத்தில் நடித்த அனைவரும் தங்களது கதராபாத்திரங்களை சிறப்பான கொடுத்துள்ளனர்.

இந்த திரைப்படம் கடந்த 10-ஆம் தேதி திரையரங்குகளில் விநாயகசதுர்த்தி அன்று வெளியானது. வெளியான நாளிலிருந்து இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகிறார்கள்.

அந்த வகையில், தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தலைவி படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். தனது படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், சில படங்களை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் படத்தின் இயக்குனரை பாராட்டி வருகிறார்.

இந்நிலையில், தற்போது தலைவி திரைப்படத்தை பார்த்துவிட்டு, இயக்குனர் ஏ எல் விஜய்க்கு போன் செய்து, அவரையும் படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார். இதற்கு முன்பு நடிகர் ரஜினி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.