தலைவர் 169 படத்தை தயாரிக்கும் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனம்..??

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து ராஜியின் 169 வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில், அந்த திரைப்படத்தை ரஜினியின் எந்திரன், பேட்ட, அண்ணாத்த போன்ற படங்களை தயாரித்த சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.