மருத்துவமனையில் இருந்து திரும்பிய வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் லாரா!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் , வீரருமான  பிரையன் லாரா தற்போது உலகக்கோப்பையில் போட்டியில் வர்ணையாளராக உள்ளார்.இந்நிலையில் இவர் மும்பையில் உள்ள பிரபல தொலைக்காட்சியில் வர்ணையாளராக பணியாற்ற மும்பை வந்து உள்ளார்.
நேற்று முன்தினம் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு இருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.அப்போது அவரை மும்பை பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல பரிசோதனைகள் செய்து சிகிக்சை அளிக்கப் பட்டது.
பிறகு பிரையன் லாரா தான் நலமாக இருப்பதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து நேற்று பகல் 12.20 மணிக்கு மருத்துவமனையில் இருந்து அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்கு திரும்பினார்.

author avatar
murugan