மூணாறு அருகே நிலச்சரிவு.. 5 பேர் உயிரிழப்பு..70-க்கும் மேற்பட்டோர் காணவில்லை..!

ராஜமாலா அருகே தேயிலை தோட்டப் பணியாளர்கள் தங்கி இருந்த பகுதியில் இன்று அதிகாலையில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

கேரளாவில் தென்மேற்கு தீவிரமாக பெய்து வருகிறது.  கடந்த மூன்று நாட்களாக இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில், ராஜமாலா அருகே தேயிலை தோட்டப் பணியாளர்கள் தங்கி இருந்த பகுதியில் இன்று அதிகாலையில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி இருப்போர் பெரும்பாலும் தமிழகத்திலிருந்து தேயிலை தோட்டப் பணிக்குச் சென்றவர்கள் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர், மீட்டுப்படையினர், வனத்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், தேசிய பேரிடர் மீட்பு படையின் குழு ஒன்று அப்பகுதிக்கு சென்றுள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடும் மழையும், காட்டாற்று வெள்ளமும் செல்வதால் மீட்புப்படையினர் பெரும் சிரமமாக உள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட  இடத்திலிருந்து 5 பேர் சடலங்களாக  மீட்கப்பட்டுள்ளதாகவும், 10 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்தது 80 பேர் இப்பகுதியில் தங்கியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 நிலச்சரிவில் தோட்டத் தொழிலாளர்களின் இருபது வீடுகளும் இடிந்து சிக்கி உள்ளதாக பி.டி.ஐ  செய்தி நிறுவனம்  தெரிவித்துள்ளது.

author avatar
murugan