கோலாகலத்துக்கு தயாராகும் கும்பகோணம்.!மாற்றத்தை அருளும் மாசிமகம் என்னைக்கு! தெரியுமா??

  • மாசிமாதத்தில் மகத்திருவிழாவிற்கு தயாரகிறது கோவில்களின் நகரமாக காட்சித் தரும் கும்பகோணம் 
  • மாசிமகத்திருவிழா வரும் மார்ச்- 8ந்தேதி நடைபெறுகிறது என்று மகாமக அறக்கட்டளை பத்திரிக்கை வெளியிட்டுள்ளனர்.

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகின்ற மாசி மகப் பெருவிழா நடப்பாண்டில்  மாா்ச் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான பத்திரிகை வெளியீட்டு விழா நேற்று  நடைபெற்றது. தென் பாரத கும்பமேளாவின் மகாமக அறக்கட்டளைத் தலைவா் பி.கே. கல்யாணசுந்தரம் இப்பத்திரிக்கை விழாவிற்கு தலைமை ஏற்றார்.

இந்நிலையில் இவ்விழாவானது முறைப்படி சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் பிப். 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து, காலை, இரவில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.

Image result for கும்பகோணம் மாசிமகம்

அதே போல் ஆதிகும்பேசுவரா் கோயிலில் மாா்ச் 7ந்தேதி தேரோட்ட நிகழ்வும்,மாா்ச் 8ந்தேதி ஸ்ரீசக்கரபாணி கோயிலில்  தேரோட்டமும் நடைபெறகிறது.மேலும், மாசிமக நாளான மாா்ச் 8ந்தேதி அதிகாலை 4 மணி முதல் மகா மகக்குளத்தில் பக்தா்கள் புனித நீராடத்தொடங்கி விடவார்கள்

Image result for கும்பகோணம் மாசிமகம்

இதனைத்தொடர்ந்து பிற்பகல் 12.30 மணிக்கு ஆதிகும்பேசுவரா் உள்ளிட்ட சிவன் கோயிலின் மூா்த்திகள் மகாமகக் குளத்தில் எழுந்தருளும் தீா்த்தவாரி வெகுச்சிறப்பாக நடைபெறும்.இதனை கண்டு தரிச்சிக்கும் போதே மெய்சிலிர்க்கும் சரியாக  மாலை 5 மணிக்கு ஆன்மிக ஊா்வலம் நடைபெறும் அவ்வாறு ஊர்வலமாக மகாமக குளக்கரையில் வலம் வந்து மாலை 6 மணிக்கு  ஆரத்திப் பெருவிழா மகாமகக் குளத்தில் நடைபெறகிறது.

author avatar
kavitha