கிருஷ்ணகிரியில் ஊராட்சி மன்றத் தலைவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்!

கிருஷ்ணகிரியில் ஊராட்சி மன்றத் தலைவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்.

சமீப காலமாகவே பட்டியலினத்தவர்களுக்கான கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கடலூரில், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சை எழுப்பிய நிலையில், மேலும் பட்டியலினத்தவர்களுக்கு எதிராக தொடரும் கொடுமைகள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி அஞ்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் பட்டியலினத்தவர் என்பதால், ஊராட்சி செயலாளர் அரசின் தகவல்களை தெரிவிப்பதில்லை என்றும், இதனால் அவர் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஊராட்சி மன்ற செயலாளரின் செயல் தனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.