500டி 20 போட்டிகளில் விளையாடிய கிரன் பொல்லார்ட் வரலாற்று சாதனை..!

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கை அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது.  நேற்று நடைபெற்ற முதல் டி 20 போட்டி மூலம்  பொல்லார்ட்  500 வது போட்டியில் விளையாடினார்.

இதனால் நேற்று பொல்லார்டுக்கு இதை கொண்டாடும் விதமாகவே புதிய ஜெர்சி வழங்கப்பட்டது.இதுவரை பொல்லார்ட் உள்ளூர் மற்றும் சர்வதேச டி 20 போட்டிகளில் மொத்தமாக 500 போட்டிகளில் விளையாடி 10,000 ரன்களை கடந்துள்ளார் .

டி 20 வரலாற்றில் 500 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.இதற்கு அடுத்தஇடத்தில்  டிவைன் பிராவோ  453 போட்டிகளும் ,கிறிஸ் கெயில் 404போட்டிகளும்  விளையாடி உள்ளார்.

author avatar
murugan