வந்த வேகத்திலேயே திரும்பிப்போன கிம்போ ஆப்..!

வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக, பாபா ராம்தேவின் பதாஞ்சலி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கிம்போ எனும் குறுந்தகவல் செயலியை  வெளியிட்டது.
ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வெளியான சில மணி நேரங்களில் செயலியின் பாதுகாப்பு குறித்து பலரும் குற்றஞ்சாட்டினர். பாதுகாப்பு வல்லுநர்கள் செயலியின் பாதுகாப்பு குறித்த விமர்சனங்களை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் வெளியான ஒரே நாளில் கிம்போ செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டதோடு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.
Image result for கிம்போ ஆப்செயலி நீக்கப்பட்டதை ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கும் கிம்போ பிளே ஸ்டோர்களில் கிம்போ பெயரில் இருக்கும் மற்ற போலி செயலிகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக செயலியை நீக்கியதற்கு அதிகப்படியான வரவேற்பு தான் முக்கிய காரணம் என கிம்போ சார்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பாதுகாப்பு வல்லுநர்கள் இந்த காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற வாக்கில் தகவல் தெரிவித்துள்ளனர்.
Image result for கிம்போ ஆப்பிளே ஸ்டோரில் கிம்போ ஆப் என டைப் செய்தாலே, ஒரே பெயரில் சில எழுத்து மாற்றங்களுடன் பல செயலிகள் வெவ்வேறு டெவலப்பர்களின் பெயரில் இடம்பெற்றிருக்கின்றன. நாளுக்கு நாள் கிம்போ பெயரில் கிடைக்கும் போலி செயலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதால் வாடிக்கையாளர்கள் இவற்றை டவுன்லோடு செய்யாமல் இருப்பது நல்லது.
Image result for கிம்போ ஆப்ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று அதிகாரப்பூர்வ கிம்போ ஆப் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. எனினும் பதாஞ்சலி சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்களில் இந்த செயலி விரைவில் மீண்டும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment