அணு ஆயுத சோதனையை நிறுத்தியது வடகொரியா..!!அதிபர் டிரம்ப் வரவேற்பு..!!

வடகொரியாவுக்கு இனி அணு ஆயுத சோதனைகளோ கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனைகளோ தேவையில்லை என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் அறிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு உடனடியாக சோதனைகளை நிறுத்துவதாகவும் கிம் ஜோங் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரிய கடல் பகுதியில் அமெரிக்கப் படைகளின் போர் ஒத்திகைகளுக்கு கடந்த காலங்களில் ஆட்சேபம் தெரிவித்து வந்த கிம் ஜோங், தற்போது அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.

ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக வடகொரியா அறிவித்துள்ள நிலையில் அதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரிய அதிபர் கிம்-ஜோங்-உன் முன்வந்துள்ளதாக அந்நாட்டு அரசுத் தரப்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அணு ஆயுத சோதனைகள் நிறுத்திவைக்கப்படுவதாகவும் முக்கிய அணுஆயுத சோதனைத் தளம் ஒன்று மூடப்படுவதாகவும், வடகொரியா அறிவித்துள்ளது.

இது மிகப்பெரிய முன்னேற்றம் என்று கூறி வரவேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இது வடகொரியாவுக்கு மட்டுமன்றி உலகுக்கே நல்ல செய்தி என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வடகொரிய அதிபருடனான பேச்சுவார்த்தையை எதிர்நோக்குவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment