ஏப்ரல் 1 முதல் வாகனங்களின் விலையை 3% உயர்த்துகிறது கியா இந்தியா நிறுவனம்!

Kia India : ஏப்ரல் 1ம் தேதி முதல் வாகனங்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக கியா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் கியா இந்தியா நிறுவனம், அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்து வருகிறது.

இந்திய சந்தையில் புது புது மாடல்கள் வெளியிட்டு மக்கள் மத்தியில் தனி இடம் கியா நிறுவனம் பிடித்துள்ளது. இந்த நிலையில், இந்திய சந்தையில் விற்பனை செய்யும் கியா நிறுவனம் விரைவில் அதன் கார்களின் விலைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 1ம் தேதி முதல் வாகனங்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக கியா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய 2024-25ஆம் நிதியாண்டு தொடங்குகிறது. அந்த சமயத்தில் கார்களின் விலைகள் உயர்த்துவதாக வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்தவகையில், கியா இந்தியா தனது அனைத்து மாடல் கார்களில் விலையை ஏப்ரல் மாதம் முதல் 3% உயர்த்தப்பட உள்ளது.

அதன்படி, கியா செல்டோஸ், சொனெட் மற்றும் கேரன்ஸ் போன்ற கார்களின் விலைகள் உயரவுள்ளன. இந்த கார்கள் தான் சந்தையில் அதிக விற்பனையில் உள்ளது. எனவே, உதிரி பாகங்களின் விலை உயர்வு மற்றும் விநியோகம் தொடர்பான செலவீனங்களின் மதிப்பு அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்