கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலி – தமிழகத்தில் உஷார் நிலை !

கேரளாவில் நிபா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், கேரள எல்லை ஓரம் இருக்கும் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கன்னியாகுமரி தேனி  உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து கேரளாவில் இருந்து வருவோர்க்கு மருத்துவ பரிசோனை செய்யப்படுகிறது.மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவனைகளிலும் வைரஸ் பரவாமல் இருக்க உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் நிபா வைரஸ் பரவாமல் இருக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்,இதுவரை நிபா வைரஸ் அறிகுறியால் 311 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.