கீழடியில் நடைபெறும் அகழாய்வு.. பழங்காலத்து எடைக்கற்கள் கண்டெடுப்பு!

கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில், 4 வகையான எடைக்கற்களை அறிஞர்கள் கண்டெடுத்துள்ளனர். இதனால் அங்கு வணிகம் நடைபெற்றதை உறுதி செய்ய முடிகிறது.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என தெரிவித்த நிலையில், அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அங்கு வழக்கம்போல் தங்களின் அகழாய்வினை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது வெவ்வேறு அளவுகளில் உருண்டை வடிவ அளவில் கருங்கல்லின் ஆன நான்கு எடைக்கற்கள் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். உருளை வடிவில் அமைந்துள்ள அந்த கற்களில் ஒவ்வொன்றும் 8, 18, 150 மற்றும் 300 கிராம் எடை கொண்டவை.

இந்த கற்களை கண்டெடுத்ததன் மூலம், அந்த பகுதிகளில் வணிகம் நடைபெற்றதை உறுதி செய்ய முடிகிறது என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.