கவிதாவுக்கு மேலும் 3 நாட்கள் காவல் நீட்டிப்பு!

Kavitha: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவுக்கு மேலும் 3 நாட்கள் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மனிஷ் சிசோடியா மற்றும் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் சிக்கியுள்ள நிலையில், கடந்த 15ம் தேதி தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மகளும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்எல்சியுமான கே.கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பல்வேறு சோதனைகளுக்கு சம்மன்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். இந்த கைதை தொடர்ந்து, கே.கவிதாவை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த சுழலில், கவிதாவின் காவல் முடிவடைந்த நிலையில் மேலும் நீட்டிக்ககோரி அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த டெல்லி டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம், கவிதாவுக்கு மேலும் 3 நாட்கள் அமலாக்கத்துறை காவல் நீட்டித்து உத்தரவிடப்பட்டது. அதன்படி, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுளா கவிதாவை, மேலும் 3 நாட்கள் அதாவது மார்ச் 26 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்பின், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கவிதா கூறியதாவது, இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட வழக்கு. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற அரசியல் ரீதியிலான கைது நடவடிக்கை  மேற்கொள்கின்றனர். இதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என தெரிவித்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்