தீர்க்கசுமங்கலி பவ..என்று திருவருளும் காரடையான் நோன்பு இன்று!கட்டாயம் கடைபிடியுங்கள்

கணவனோடு மகிழ்ச்சியாகவும், சுமங்கிலியாகவும் வாழவேண்டும் என்பது தான் மனைவியின் எகோபித்த எண்ணமாகும். காரடையான் நோன்பு   சுமங்கலிகளுக்கு தீர்க்க சௌமங்கல்யத்தை அளிப்பதற்காக ஏற்பட்டது.  மாசியும் பங்குனியும் கூடுகின்ற நேரத்தில் விரதம் இருப்பது தான் காரடையான் நோன்பு.

இவ்விரதத்தை மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பது வழக்கம். இந்த நோன்பை காமாட்சி நோன்பு என்றும்  கெளரி நோன்பு என்றும் சாவித்திரி விரதம் என்றும் கூறுவார்கள்.

திருமணமாகிய சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள்  விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். அது என்ன காரடை என்றால் கார்காலத்தில் விளைகின்ற நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் வெல்லம் கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். 

இந்நோன்பு இருந்தால் பிரிந்த தம்பதியர் கூட ஒன்றாக சேர்க்கும் வலிமை உண்டு.மேலும்  கணவரின் ஆயுளும், ஆரோக்கியமும் அதிகரிக்கும். சுமங்கலிப்பெண்கள் மட்டும் தான் இவ்விரத்தத்தை இருக்க வேண்டும் என்று இல்லை  திருமணம் ஆகாத பெண்களும் இவ்விரதத்தை கடைபிடிக்கலாம் அவ்வாறு கடைபிடித்தால் கன்னிப் பெண்களுக்கு நல்ல குணமான கணவன் கிடைப்பான் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும் நோன்பின் மிக முக்கியமான பலன் தீர்க்க சௌமாங்கல்யமாகும். இதை தான் எல்லாம்  பெண்களுக்கும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் அதனை பரிபூரணமாக அருளும் காரடையான் நோன்பினை எவ்வாறு கடைபிடிப்பது:

இன்று காலை 10.30 மணிக்கு மேல் ராகு காலம் முடிந்த  பின் மூலப்பொருள் முன்னின்று காக்கும் அந்த விநாயகரை வணங்கி பின் காமாக்ஷி தேவியை பிரார்த்தனை செய்து படத்தின் முன்னால் சிறிது இலை அல்லது தட்டு வைக்க வேண்டும்.அதில் அடை சிறிது வெண்ணை, வெற்றிலைப் பாக்கு மஞ்சள் கயிறுகளையும் அதில் வைக்க வேண்டும். ஒரு கயிற்றை அம்பாளின் படத்திற்கு சாத்திவிட்டு மற்றதைத் தான் அணிய வேண்டும். பின்னர் அம்பாளுக்கு நைவேத்யம் செய்ய வேண்டும்.  கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை முடிக்க வேண்டும்.காலை முதல் மாலை வரை விரதம் இருக்கும் பெண்கள்  சுமங்கலிக்கான ஸ்லோகங்களை படிப்பது நல்லது

author avatar
kavitha