கந்த சஷ்டி கவசம் விவகாரம்.. இன்று உத்தரவு.!

கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்ட்டுள்ளனர்.

இந்த சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில் வாசன் என்பவரை முதலில் போலீசார் கைது செய்தனர். பின்னர், “கந்த சஷ்டி கவசம்” குறித்து வீடியோவில் பேசிய சுரேந்தர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இரண்டு நாள்களுக்கு முன் சோமசுந்தரம், குகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

அதில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் சோமசுந்தரம் என்பவர் அந்த வீடியோவை பதிவு செய்தவர் எனவும், குகன் என்பவர் அந்த வீடீயோவை எடிட் செய்த எடிட்டர் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசனை, காவலில் எடுத்து விசாரிக்க  சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இவர்கள் பின்னணியில் உள்ளவர்களை குறித்து விசாரிக்க இருப்பதால் காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என காவல்துறை தெரிவித்தது.

இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

author avatar
murugan