கமல்ஹாசன்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் அறிவிப்பு .!

கமல்ஹாசன்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் குறித்த டீசர் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தனது 232வது திரைப்படத்தை நடிக்க உள்ளார் .  அனிருத் அவர்கள் இசையமைக்கும் இந்த படத்தினை கமல் அவர்களின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது .

இந்த நிலையில் “கமல்ஹாசன் 232” படத்தின் டைட்டிலை அறிவிக்கும் டீசரை உலகநாயகனின் பிறந்தநாளான நாளை மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் கமல் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.