மம்முட்டிக்கு ஜோடியாக காதல் கதையில் ஜோதிகா.! அழகான அப்டேட் இதோ..

நடிகை ஜோதிகா தமிழில் ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்துகொண்டிருந்த நிலையில், கடந்த 2006-ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து சற்று விலகி விட்டார் என்றே கூறலாம். திருமணத்திற்கு பிறகு ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்காமல் தனக்கு ஏற்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே ஜோதிகா நடித்து வருகிறார்.

Jyothika Smile
Jyothika Smile Image Source Google

குறிப்பாக இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான உடன் பிறப்பே திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது ஒரு சில நல்ல கதைகளை கொண்ட படங்களில் மட்டும் ஜோதிகா நடித்து வருகிறார்.

இதையும் படியுங்களேன்- நேத்து குவின்ஸி.. இன்னைக்கு மகேஸ்வரி, மைனா.!அசல் கோலார் செய்யும் கோளாறு வேலைகள்…

Kaathal - The Core Moive
Kaathal The Core Moive Image Source Twitter

இந்த நிலையில் தற்போது, நடிகை ஜோதிகா மம்முட்டிக்கு ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மலையாளத்தில் உருவாகும் இந்த படத்திற்கு  ‘காதல்: தி கோர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kaathal - The Core Moive
Kaathal The Core Moive Image Source Twitter

இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான  ஜியோ பேபி  இயக்குகிறார்.படத்தை நடிகர் மம்முட்டியே தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் மத்தியூஸ் புலிக்கன் இசையமைத்து வருகிறார். விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment