#JustNow: பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜிக்கு ஆகஸ்ட் 18 வரை நீதிமன்ற காவல்!

பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜியை ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு.

மேற்கு வாங்க மாநிலத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜியை அமலாக்கத்துறை கடந்த மாதம் கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பான சோதனையில், அர்பிதா முகர்ஜி வீட்டில் மொத்த 50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜியை ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, மேற்கு வங்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சட்டவிரோதமான முறையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமனம் செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பார்த்தா சட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜி ஜூலை 23 அன்று கைது செய்யப்பட்டதில் இருந்து விசாரணை அமைப்பின் காவலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment