#JustNow: ஜூலை 1 முதல் 300 யூனிட் மின்சாரம் இலவசம் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

பஞ்சாபில் ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு.

பஞ்சாபில் ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான அரசு இன்றுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பஞ்சாபில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது.

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சி அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவது என்பதாகும். இதுபோன்று டெல்லியில் ஆம் ஆத்மி அரசு மாதம் ஒன்றுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குகிறது. கடந்த மாதம் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், வீட்டுக்கே ரேஷன் வழங்கும் திட்டத்தை அறிவித்திருந்த நிலையில், தற்போது பஞ்சாபில் ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்