வெறும் ரூ.12,000 பட்ஜெட்..8ஜிபி ரேம்..50 எம்பி கேமரா.! உலகளவில் அறிமுகமானது போகோ சி65.!

POCO C65 : ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான போகோ (POCO), அதன் சி-சீரிசில் புதிய தயாரிப்பான போகோ சி65 (POCO C65) என்கிற பட்ஜெட் ஸ்மார்ட்போனை உலக அளவில் உள்ள சந்தைகளில் வெளியிட்டுள்ளது.

இதில் இருக்கக்கூடிய பிராசஸர் மற்றும் பேட்டரி, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகமான போகோ சி55 ஸ்மார்ட்போனில் இருப்பது போலவே உள்ளது. ஆனால் கேமரா, ரேம், ஸ்டோரேஜ் அம்சங்கள் ஒத்துப்போகவில்லை.

டிஸ்பிளே

இதில் 1600×720 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட வாட்டர் டிராப் நாட்ச்சுடன் கூடிய 6.74 இன்ச் டாட் டிராப் டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் உள்ளது. அதோடு சைடு மௌன்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது.

பிராசஸர்

ஆர்ம் மாலி-ஜி52 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட, மீடியாடெக் ஹீலியோ ஜி85 என்கிற 4ஜி பிராசஸர் போகோ சி65 ஸ்மார்ட்போனில் உள்ளது. இதில் ஆன்ட்ராய்டு 13 அடிப்படையில் இருங்கக்கூடிய எம்ஐயூஐ 14 மூலம் இயங்குகிறது. விர்ச்சுவல் ப்ராக்ஸிமிட்டி, அம்பிஎண்ட் லைட் சென்சார், எலக்ட்ரானிக் காம்பஸ் போன்ற சென்சார்களும் உள்ளன.

கேமரா

போகோ சி65 போனில் டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதன்படி, 50 எம்பி கொண்ட மெயின் கேமரா மற்றும் 2 எம்பி கொண்ட மேக்ரோ கேமரா ஆகியவை அடங்கும். இந்த கேமரா மூலம் 1080 பிக்சல் தெளிவுடன் கூடிய வீடியோவைப் பதிவு செய்யலாம். செல்ஃபிக்காக 8 எம்பி கேமரா உள்ளது. ஃபிலிம் கேமரா, எச்டிஆர் மோட், நைட் மோட், போர்ட்ரெய்ட் மோட், 50 எம்பி மோட் போன்ற கேமரா அம்சங்களும் உள்ளது.

பேட்டரி

இந்த ஸ்மார்ட்போன் 192 கிராம் எடை மற்றும் 8.09 மிமீ தடிமனும் கொண்டுள்ளது. இதில் 5000 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியைச் சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

ஸ்டோரேஜ் மற்றும் விலை

பர்பில், ப்ளூ, பிளாக் ஆகிய மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்குக் கிடைக்கும். அதன்படி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 129 டாலர் (ரூ.10,729) ன்ற விலையிலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 149 டாலர் (ரூ.12,399) என்ற விலையிலும் கிடைக்கிறது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.