8 வழி சாலை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு..!

மத்திய அரசு ரூ.10,000 கோடி செலவில் 277 கி.மீ தொலைவிற்கு சேலம் – சென்னை இடையே 8 வழி சாலை அமைக்க சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, நில உரிமையாளர்கள், விவசாய சங்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிலம் கையகப்படுத்த தடை விதித்தது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எட்டு வழி சாலை திட்ட செயல் இயக்குனர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், சென்னை சேலம் எட்டு வழி சாலை தொடர்பாக  வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவுள்ளது.

author avatar
murugan