நீதிபதிகள் இனி அங்கி அணிய வேண்டாம்..! – உயர்நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் தவிர பிற நீதிமன்றங்களில், தீர்ப்பாயங்களில் ஆஜராகும்நீதிபதிகள், அங்கி அணிவது கட்டாயமில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு. 

கடந்த 2017- ஆம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி, தேசிய கம்பெனி சட்ட வாரிய பதிவாளர் தேசிய கம்பெனி சட்ட வாரியத்தில் ஆஜராகும் நீதிபதிகள், அவர்களுக்கான அங்கியை அணிய வேண்டும் என உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.ராஜேஷ் என்பவர், இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017- ஆம் ஆண்டு பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் அமர்வு, தேசிய கம்பெனி சட்ட வாரிய விதிகளில், ஆடை கட்டுப்பாடு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க எவ்வித அதிகாரமும் வழங்கப்படவில்லை. எனவே, வழக்கறிஞர் அங்கி அணிய வேண்டுமென்று உத்தரவிட முடியாது என்றும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் தவிர பிற நீதிமன்றங்களில், தீர்ப்பாயங்களில் ஆஜராகும்நீதிபதிகள், அங்கி அணிவது கட்டாயமில்லை என்றும் உத்தரவியுளளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment