ரொமான்ஸ் போஸ்டரை வெளியிட்டு ‘ஜோக்கர் 2’ ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு.!

Joker 2: ஜோக்கர் திரைப்பட ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த ‘ஜோக்கர் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் இயக்குனர் டோட் பிலிப்ஸின் வரவிருக்கும் மியூசிக்கல் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படமான ‘ஜோக்கர் 2’ அல்லது ‘ஜோக்கர்: ஃபோலி ஏ டியூக்ஸ்’ என்றழைக்கப்படும் இப்படத்தின் புதிய போஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் வெளியிட்டுள்ளது.

இதன் முதல் பாகம், ஜோக்க அக்டோபர் 2, 2019 அன்று ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் பாகம் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகம் இப்பொழுது உருவாகி ரிலீஸுக்கு தயாராகி உள்ளது, அதன்படி படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளிவரவுள்ளது.

இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் எதிர்பார்த்ததை விட விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. ஆம், படக்குழு வெளியிட்டுள்ள அந்த போஸ்டரில் ட்ரெய்லர்  வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


புதிய போஸ்டரில், ஜோக்கர் தனது காதல் ஆர்வலரான ஹார்லி க்வின் உடன் கிளாசிக் பால்ரூம் நடனம் ஆடுவதைக் காட்டுகிறது. why so serious என சீரியஸாக டயலாக் கூறும் படத்தின் நாயகன் ரொமான்ஸாக போஸ் கொடுத்திருக்கிறார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.