மஹிந்திரா தார்-க்கு போட்டியாளராக களமிறங்கிய ‘ஜிம்னி எஸ்யூவி’..! விலை எவ்வளவு தெரியுமா..?

மாருதி சுசுகி அதன் ஜிம்னி எஸ்யூவியை (Maruti Suzuki Jimny) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகில் உள்ள கார் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்களது புதுப்புது தயாரிப்புகளை விற்பனைக்காக சந்தையில் அறிமுகப்படுத்துகின்றன. அந்தவகையில், வாகன பிரியர்கள் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கார் தான் மாருதி சுசுகி ஜிம்னி எஸ்யூவி (Maruti Suzuki Jimny). தற்போது, இந்த ஜிம்னி எஸ்யூவி காரை மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Jimny
Jimny Image Source TwitterPowerDrift<br >

இந்த எஸ்யூவிக்கான முன்பதிவு இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. ஐந்து கதவுகள் கொண்ட ஜிம்னி எஸ்யூவி, குருகிராம் ஆலையில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்து மற்ற சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

மாருதி சுஸுகி ஜிம்னி செயல்திறன்(Performance):

மாருதி சுஸுகி ஜிம்னி ஐடில் ஸ்டார்ட் ஸ்டாப் உடன் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் (K-series) எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 4000rpm முதல் 6000rpm வரை வழங்கும். ஜிம்னி எஸ்யூவி 210மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.

Jimny
Jimny Image Source TwitterCNBCTV18News

மாருதி சுஸுகி ஜிம்னி பாதுகாப்பு அம்சம் (Safety):

மாருதி சுஸுகி ஜிம்னியில் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS), எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் விநியோகம் (EBD), பிரேக் அசிஸ்ட் செயல்பாடு, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), பிரேக் லிமிடெட் ஸ்லிப் டிஃபெரன்ஷியல், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் போன்ற நிலையான அம்சங்களுடன் வருகின்றன.

Jimny
Jimny Image Source TwitterCNBCTV18News

கூடுதலாக, சிறந்த பாதுகாப்பு செயல்திறனை வழங்குவதற்காக சுஸுகியின் சொந்த டோடல் எபக்ட்டிவ் கண்ட்ரோல் டெக்னாலஜி (TECT) பயன்படுத்தப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி ஜிம்னி ஏழு வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது.

மாருதி சுஸுகி ஜிம்னி அமைப்பு:

ஜிம்னியின் உள்புறம் 9-இன்ச் SmartPlay Pro+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைக் கொண்டுள்ளது. ஜிம்னி ஆர்காமிஸ் சர்ரவுண்ட் மியூசிக் சிஸ்டம் (ARKAMYS) மூலம் பிரீமியம் ஒலியை வழங்குகிறது. இந்த எஸ்யூவி ஆனது பாடி-ஆன்-ஃபிரேம் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் வாஷர்களுடன் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் உள்ளன.

Jimny
Jimny Image Source TwitterCNBCTV18News

மாருதி சுஸுகி ஜிம்னி விலை:

இந்தியாவில் மாருதி சுஸுகி ஜிம்னியின் அடிப்படை மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.74 லட்சம் எனவும் அதிக அம்சம் கொண்ட மாடல் ரூ.15.05 லட்சம் விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவியை ஏற்கனவே 30,000-க்கும் அதிகமானவர்கள் முன்பதிவு செய்துள்ளதாக மாருதி கூறியுள்ளது.

Jimny
Jimny Image Source Twittermuraliswami

வாடிக்கையாளர்கள் ஜிம்னியை மாருதியின் சந்தா திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.33,550 செலுத்தி வாங்கலாம். மாருதி சுஸுகி  ஜிம்னி எஸ்யூவி, மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்க்காவுக்கு இணையாக போட்டியிடுவதற்கு களமிறங்கியுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.