ஜெ. மரண அறிக்கை; கருத்து சொல்ல விரும்பவில்லை – ஓபிஎஸ் பதில்

சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் பதில்.

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இந்த ஆணையம் கடந்த 3 வருடமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று தமிழக அரசால் பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், 2012-ல் மீண்டும் இணைந்த பிறகு ஜெயலலிதா, சசிகலா இடையே சுமுக உறவு இல்லை.

இதில் சசிகலாவை குற்றம் செய்தவராக கருதி விசாரிக்க வேண்டும். சசிகலாவை குற்றம் சாற்றுவதை தவிர வேறு வழியே இல்லை. ஜெயலலிதா மயக்கம் அடைந்த பின் நடந்தது எல்லாம் ரகசியமாக உள்ளது. இதனால், சசிகலா, கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன், சிவகுமார் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவக்குழு 5 முறை அப்போலோ வந்திருந்தாலும், ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. அஞ்சியோவுக்கு பரிந்துரைத்தும் ஜெயலலிதாவின் கடைசி மூச்சு வரை ஏன் அது நடக்கவில்லை எனவும் பல்வேறு திடுக்கிட்டு தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், வழக்கு நிலுவையில் இருப்பதனால் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்த செய்தியாளர் கேள்விக்கு ஓபிஎஸ் பதிலளித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment