ஜாவத் புயல் வங்கக்கடலில் வலுவிழந்தது…!

வங்கக்கடலில் உருவான ஜாவத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.

வங்ககடலில் உருவான ஜாவத் புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வலுவிழந்த ஜாவத் புயல் விசாகப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 180 கிமீ தொலைவில் கோபால்பூருக்கு தெற்கே 260 கிமீ தொலைவில் (ஒடிசா , பூரியில் இருந்து 330 கிமீ தென்-தென்மேற்கில்) உள்ளது.

 காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி நாளை ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

author avatar
murugan