ஜாவத் புயல்: இன்று தாழ்வு மண்டலமாக நண்பகல் ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும்..!

வலுவிழந்த ஜாவத் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று நண்பகல் பூரிக்கு அருகே ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் மாலை புயலாக வலுப்பெற்றது. அதற்கு ஜாவத் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்பகுதியை நெருங்கி, இன்று காலை ஒடிசாவின் புரி அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

நேற்று இரவு இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் ஜாவத் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. வலுவிழந்த ஜாவத் புயல் விசாகப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 180 கிமீ தொலைவில் கோபால்பூருக்கு தெற்கே 260 கிமீ தொலைவில் (ஒடிசா , பூரியில் இருந்து 330 கிமீ தென்-தென்மேற்கில்) உள்ளது. தற்போது வடக்கு-வடகிழக்கு திசையில் தொடர்ந்து நகர்கிறது என தெரிவித்தது.

இந்நிலையில், வலுவிழந்த ஜாவத் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று நண்பகல் பூரிக்கு அருகே ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

author avatar
murugan