29 C
Chennai
Wednesday, June 7, 2023

அமெரிக்க பள்ளி பட்டமளிப்பு விழாவில் பயங்கர துப்பாக்கி சூடு.! 7 பேர் சுட்டு கொலை.!

அமெரிக்காவில் பள்ளி பட்டமளிப்பு விழாவில் மர்ம நபர்கள் நடத்திய...

தெற்கு அமெரிக்காவில் இருந்து செர்பியா புறப்பட்டார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.!

சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு செர்பியா புறப்பட்டார் குடியரசு...

உருவானது ‘பிபோர்ஜோய்’ புயல்.! 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுபெறுகிறது…

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்...

கார்த்தியின் பிறந்தநாள் ட்ரீட்டாக ‘ஜப்பான்’ படத்தின் சூப்பர் அப்டேட்.!

நடிகர் கார்த்தி தற்போது எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கிய ‘ஜப்பான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

இப்படம், அதன் தலைப்பிலேயே சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது. அதன்படி, படத்திற்கு ஜப்பான் என்று ஏன் பெயர் வைக்கப்பட்டுள்ளது? கார்த்தியின் கேரக்டருக்கு இந்த ஆசிய நாட்டின் பெயரா? என்பதை இன்று காலை 11.00 மணிக்கு அறிமுக வீடியோ ஒன்று வெளியாக இருக்கிறது. கார்த்தியின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த வீடியோ வெளியாக உள்ளது.

ஜோக்கர் பட ஐயுணர் ராஜு முருகன் எழுதி இயக்கிய, ஜப்பான் ஒரு திருட்டு ஆக்‌ஷன் திரைப்படம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ‘கோல்ட்’ ஒரு முக்கிய கருப்பொருளாக தெரிகிறது. இப்படத்தில் அழகிய நடிகை அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் கீழ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.