அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்க கழிவுநீரை கடலில் விட ஒப்புதல் அளித்த ஜப்பான்..!

புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்கக் கழிவுநீரை கடலில் விட ஜப்பான் ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்கக் கழிவுநீரை வரும் அடுத்த ஆண்டு கடலில் வெளியேற்ற உள்ள திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அளித்துள்ள ஒப்புதல்படி, கழிவுகளை வெளியேற்றுவதற்கு தேவையான வசதிகளை டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி உருவாக்கத் தொடங்கும்.

கழிவுநீரை வெளியேற்ற கடந்த வருடம் அரசு எடுத்த முடிவின்படி, டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி ஹோல்ட்டிங்ஸ் நிறுவனம் அணுமின் ஆலையின் செயலிழப்பிற்கு தேவையான நடவடிக்கையாக இந்த திட்டத்தை டிசம்பர் மாதத்தில் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment