அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு படையெடுத்த உலக பிரபலங்கள்.! ஸ்பெஷல் அந்தஸ்து பெற்ற உள்ளூர் ஏர்போர்ட்.! 

Anant Ambani தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா திருமணம் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி முன்னர் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க், உலக பணக்காரரான பில் கேட்ஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவனா டிரம்ப் உள்ளிட்ட உலக பிரபலங்கள் முதல் அரசியல், சினிமா, கிரிக்கெட் என பல்வேறு பிரபலங்கள் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்த திருமண முன் வரவேற்பு நிகழ்ச்சியானது குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்று வருகிறது.  பிரபலங்கள் அனைவரும் தனி விமானங்கள் மூலம் ஜாம்நகர் வந்து கொண்டு இருக்கின்றனர். ஜாம்நகர் விமான நிலையம் என்பது உள்ளூர் விமான சேவை வழங்கிவரும் விமான நிலையம் ஆகும்.

Read More – அம்பானி வீட்டு திருமணம்: பாடகி ரிஹானா வாங்கிய பிரமாண்ட சம்பளம்?

இப்படியான சூழலில் தற்போது ஜாம்நகர் விமான நிலையம் தற்போது சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது என தனியார் செய்தி நிறுவனமான தி இந்து செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த உள்ளூர் விமான நிலையத்திற்கு  10 நாட்களுக்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கி உயரடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து ஜாம்நகர் விமான நிலையத்தில் சர்வதேச வருகையை முறைப்படுத்துதல் மற்றும் அவர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு வழங்கியுள்ளன.

read more- களைகட்டும் ஜாம்நகர்… அம்பானி வீட்டு திருமணத்துக்கு வருகை தந்த பிரபலங்கள்.!

கடந்த பிப்ரவரி 25 முதல் வரும் மார்ச் 5 வரையில் ஜாம்நகர் விமான நிலையம் பல சர்வதேச விமானங்கள் வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திருமண நிகழ்வுக்காக, இந்திய விமானப்படை (IAF) விமான நிலையத்தின் தேவை கருதி முக்கிய தொழில்நுட்ப அனுகலையும்  வழங்கியுள்ளது. ஒரே நேரத்தில் மூன்று விமானங்கள் வரையில் விமான நிலையத்தில் தரையிறங்கும் அளவுக்கு தொழில்நுட்ப ரீதியில் இந்திய விமானப்படை உதவுகிறது.

பயணிகள் வருகை பரப்பளவானது 475 சதுர மீட்டரில் இருந்து விரிவுபடுத்தி 900 ச.மீ வரை தற்போது உள்ளது. முன்பு 180 பயணிகள் மட்டுமே ஒரே நேரத்தில் வருவதற்கு இடம் இருக்கும் தற்போதுஅவை சுமார் 360 பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Read More – ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம்.! கோடியில் புரண்ட வெளிநாடு பாடகர்கள்…

தற்போது பராமரிப்புப் பணியாளர்கள் 19இல் இருந்து 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளனர். மாநில அரசு பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையை 35ல் இருந்து 70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விஐபிக்கள் தங்கும் அறை,  ஆடை மாற்றும் அறை மற்றும் கழிவறை என தற்காலிக அறைகள் பல உருவாக்கப்பட்டுள்ளன என செய்திகள் வெளியாகியுள்ளன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment